* All fields are mandatory

School Computer Centre Established by Sri Subramaniya Vidyalayam

School Computer Centre Established by Sri Subramaniya Vidyalayam
  • Remaining time:0 days left
  • Donor(s):1
Location:ஸ்ரீ சுப்ரமணிய மகளிர் வித்யாலயம், புங்குடுதீவு

ஸ்ரீ சுப்ரமணிய பாடசாலையில் கணனி ஆய்வுகூடம் அமைக்கப்பட்டது


ஆவணி மாதம் 1ஆம் திகதி 2017 ஆம் வருடம் காலை 10.30 மணியளவில் புங்குடுதீவு ஸ்ரீ சுப்ரமணிய பாடசாலையில் அமைக்கப்பட்ட கணனி ஆய்வுகூடத்தினை வலயக் கல்வி பணிப்பாளர் திரு.சுப்ரமணியம் சுந்தரசிவம் அவர்கள் திறந்து வைத்தார். எமது தாய்நில மேம்பாட்டு இணையம் (HOME LAND DEVELOPMENT GROUP) ஒன்று சேர்ந்து இதனை நிர்மாணிப்பதற்கு உதவி புரிந்துள்ளனர். இந்நிகழ்வினை திறம்பட நடத்துவதற்கு வைத்தியர் திரு.ஸ்ரீதரன் கணேஷ் அவர்கள் பெரும் உதவி புரிந்தமை குறிப்பிடத்தக்கது.
Raised: $300,000

திறப்பு விழா

விருந்தினர் உரை

நிகழ்வின் முக்கிய அங்கத்தவர்கள்

பாடசாலையின் தற்போதைய நிலை - 2017

பாடசாலையின் வரலாறு

இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள தீவுகளில் ஒன்றாகிய புங்குடுதீவிலே சைவ கலாமன்றத்தில் துணையுடனும் யாழ்ப்பாண சைவ வித்தியா அபிவிருத்தி சங்கத்தின் பேருதவியுடன் 1926ம் ஆண்டு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம் அமைக்கப்பட்டது. இப் பாடசாலை யாழ் இந்துக் கல்லூரி அதிபராக விளங்கிய திரு. டிருப் அவர்கள் திறந்து வைத்தார். பாடசாலையின் தலைமை ஆசிரியராக உயர் திரு நமசிவாயம் அவர்கள் கடமையாற்றினார். அதன் பின்னர் வி.ஜே.சின்னையா ஆசிரியர் தலைமை ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
தொடர்ந்து 1929ம் ஆண்டு பேராசிரியர் சி. இ. சதாசிவம்பிள்ளை அவர்கள் தலைமை ஆசிரியராக பணி புரிந்தார்கள். 1935ம் ஆண்டு புரட்டாதி மாதம் இப் பாடசாலை “துவிபாஷா” பாடசாலையாக மாறியது.
இக் கால கட்டத்தில் செந்தமிழும் ஆங்கிலமும் பயிலக்கூடிய பாடசாலையாக இது அமைந்தது. அதன் பிறகு செம்மல் பசுபதிப்பிள்ளை அவர்களின் அயரா உழைப்பினால் இப் பாடசாலை உயர்நிலை அடைந்து 1966ம் ஆண்டு வரை எஸ்.எஸ் சி. வகுப்புள்ள உயர்தர பாடசாலையாக இது மிளிர்ந்தது. இக் காலத்தில் சிறந்த தலைமை ஆசிரியராக கடமை புரிந்து திரு. கு.வி செல்லத்துரை ஆசிரியர் அவர்கள் இப் பாடசாலை கட்டிடத்தை சிறந்த முறையில் திருத்தி அமைத்தார். அத்தோடு இப் பாடசாலையை பெண்கள் கல்லூரியாக மாற்றி அமைப்பதற்கு பெரு முயற்சியு ம் எடுத்தார்கள்.

இப் பாடசாலையானது 01.05.1960 தொடக்கம் 03.05.1964 வரை உள்ள காலப்பகுதியில் கல்வி நிலை உன்னத நிலையில் இருந்தது. உதவி ஆசிரியராக கடமையாற்றிய திரு.அ.கனகரெத்தினம் அவர்கள் பல மாணவர்களை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்த உதவினார்.

இப் பாடசாலை 1980ம் ஆண்டு யாழ் புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணியம் கனிஷ்ட மகா வித்தியாலயம் எனும் பெயரிலிருந்து யாழ் புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயமாக பெயர் மாற்றம்செய்யப்பட்டது.
இது ஒரு மகளிர் வித்தியாலயமாக இருந்தாலும் தரம் 01 தொடக்கம் தரம் 05 வரை இருபாலரும் கற்பதற்கு அனுமதிக்கப்பட்டடுள்ளது. 1973 தொடக்கம் 1985 வரையிலான காலப்பகுதியில் யோகராசா செல்வராசா அதிபராக கடமையாற்றி வந்தார். அதனைத் தொடர்ந்து திருமதி மனோன்மணி தனபாலசிங்கம் அவர்களும் பின்னர் 1980 தொடக்கம் 1997 வரை செல்வி ம.சுப்பிரமணியம் அவர்களும் அதிபராகக் கடமையாற்றினார்

1991ம் ஆண்டில் ஐப்பசி 18ம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதரண நிலை காரணமாக 95 வீதமான மக்கள் இடம்பெயர்ந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 1992 தொடக்கம் 1995 ஒக்டோபர் வரை யாழ் இந்துக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தில் இப் பாடசாலை இயங்கி வந்தது.

1995 ஒக்ரோபர் 30ம் நாட்டின்அசாதரண நிலை காரணமாக அனைத்து மக்களும் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு பஸ் போக்குவரத்தின்மை காரணமாக யாழ் வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது. பின்னர் 1997ம் ஆண்டு தை மாதம் 15ம் திகதி முதல் பாடசாலை நிரந்தர கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. 24.08.1997ல் இருந்து திரு. நு.பஞ்சலிங்கம் அதிபராகக் கடமையாற்றி வருகின்றார்.

அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள்
வ.அருட்ச்செல்வம் 16 157

“ இப் பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாம் எமது சமூகமும் ஒன்று சேர்ந்து உதவு வதற்கு தயாராக உள்ளோம். உதவி செய்ய முன் வருபவர்கள் எமது மூலமாகவோ அல்லது அவர்கள் தனிப்பட்ட முறையிலோ உதவி செய்ய முன் வந்தால் நாம் எமது முழு ஒத்துழைப்பையும் தருவதற்கு தயாராக உள்ளோம். ”

ETC கனடா அமைப்பினர்