* All fields are mandatory

புங்குடுதீவு தேர்த்திருவிழாவில் ETC உதவியுடன் நிதி திரட்டல்

புங்குடுதீவு தேர்த்திருவிழாவில் ETC உதவியுடன் நிதி திரட்டல்
பொன்கொடு தீவாம் எங்கள்... புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்திற்கு வந்து உண்மையில் பொன்கொடு தீவு என்பதை நிரூபித்தார்கள் எங்கள் உறவுகள் ... புலம்பெயர் நாடுகளில் இருந்து வந்திருந்த உறவுகள் மனம் கோணாது அவர்களது அமைப்பிற்கு தம்மால் இயன்ற பண உதவிகளை வளங்கியிருந்தார்கள் ... அண்மையில் எமது ETC அங்கத்தவர் குழாய் கிணற்றினை அமைத்து தந்த கனடா அன்பர் உமா சங்கர் (அழகன்) . அவர்களது செயற்கை அவயவங்கள் திருத்தகத்தின் செயற்பாடுகளுக்காவே நிதி சேகரிக்கப்பட்டது. மொத்தமாக இரண்டு இலட்சங்கள் வரை வாரி வளங்கியருந்தார்கள்... அத்துடன் தொடர் உதவிகளை வளங்குவதற்கு வாக்களித்து தொடர்புகளை தந்து சென்றுள்ளார்கள்... இப்பணமானது அவர்களது செயற்கை அவயவங்கள் திருத்தகத்தினை தொடர்ச்சியாக செயற்படுத்தும் பாரிய முயற்சிக்கு அத்திவாரமாக அமைந்துள்ளது... அவர்களது உதவிகளை வளங்கிய உறவுகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்
  • Event ScheduleApr 28, 2018 at 08:00 AM to Apr 28, 2018 at 09:00 AM
Price:from $0