* All fields are mandatory

Events

2020 ஆம் ஆண்டின் தீவகத்திருவிழா நிகழ்வுகள்
ETC அமைப்பானது தீவகங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கும் மக்களின் சகோதரத்துவத்தை ஒருங்கிணைப்பதற்கும் 2020 ஆம் ஆண்டு தீவகத் திருவிழா என்ற நிகழ்வினை நடத்துவதற்கு முன்வந்துள்ளது.
$0
திருக்குறள் மனனப் போட்டிக்காக திருக்குறள் நூல் இலவசமாக அன்பளிப்பு
தீவகத் திருவிழா திருக்குறள் மனனப் போட்டிக்காக எமது அமைப்பின் அங்கத்தவரான திரு. சிவதாஸ் நடேசபிள்ளை (சுவிற்சர்லாந்து ) அவர்கள் திவகத்திற்கு விஜயம் அளித்து திருக்குறள் நூலினை இலவசமாக அன்பளிப்பு செய்தருளினார்.
$0
புங்குடுதீவு தேர்த்திருவிழாவில் ETC உதவியுடன் நிதி திரட்டல்
பொன்கொடு தீவாம் எங்கள்... புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்திற்கு வந்து உண்மையில் பொன்கொடு தீவு என்பதை நிரூபித்தார்கள் எங்கள் உறவுகள் ... புலம்பெயர் நாடுகளில் இருந்து வந்திருந்த உறவுகள் மனம் கோணாது அவர்களது அமைப்பிற்கு தம்மால் இயன்ற பண உதவிகளை வளங்கியிருந்தார்கள் ... அண்மையில் எமது ETC அங்கத்தவர் குழாய் கிணற்றினை அமைத்து தந்த கனடா அன்பர் உமா சங்கர் (அழகன்) . அவர்களது செயற்கை அவயவங்கள் திருத்தகத்தின் செயற்பாடுகளுக்காவே நிதி சேகரிக்கப்பட்டது. மொத்தமாக இரண்டு இலட்சங்கள் வரை வாரி வளங்கியருந்தார்கள்... அத்துடன் தொடர் உதவிகளை வளங்குவதற்கு வாக்களித்து தொடர்புகளை தந்து சென்றுள்ளார்கள்... இப்பணமானது அவர்களது செயற்கை அவயவங்கள் திருத்தகத்தினை தொடர்ச்சியாக செயற்படுத்தும் பாரிய முயற்சிக்கு அத்திவாரமாக அமைந்துள்ளது... அவர்களது உதவிகளை வளங்கிய உறவுகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்
$0
தீவகத்திருவிழா நிர்மாணப்பணி
புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு, காரைநகர், ஊர்காவற்துறை, வேலணை, மண்டைதீவு ஆகிய தீவுகளுடன் ETC நிறுவனம் இணைந்து 2019 ஆவணி மாதம் நடைபெறவிருக்கும் தீவகத்திருவிழாவை முன்னிட்டு மிகவும் கவர்ச்சிகரமான சன்மானங்களுடன் போட்டிகள் (திருக்குறள், விளையாட்டு நிகழ்வுகள்) நடைபெற இருக்கின்றன. அதனையொட்டி புங்குடுதீவில் உள்ள நிர்மாணிக்க முடியாத நிலையில் இருக்கின்ற பாடசாலைகளை தேர்ந்தெடுத்து சிறிய நிர்மாணப்பணிகளை மேற்கொண்டு அப் பாடசாலையும் அதனை சுற்றி உள்ள பிரதேசங்களையும் சிரமதான பணிகளை மேற்கொண்டு சுத்தம் செய்து எமது தீவகத்தில் வாழும் மாணவர்களை ஊக்குவிப்குவிப்பதோடு ஆவர்களுக்கு தேவையான பயிற்சி நிலையங்களாக (நூலகம், வலைப்பந்து, மென்பந்து, கூடிய விளையாட்டுகள்) மாற்றியமைக்க உத்தேசித்துள்ளோம். அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம உத்தியோகத்தவர்கள், வலையக் கல்விப்பணிப்பாளர்கள், ஊர் சார்ந்த அமைப்புகள் அனைவரும் தங்களுடைய முழு ஆதரவையும் உதவிகளையும் எதிர்பாக்கின்றோம்.
$0
கணனி ஆய்வகம் திறப்பு விழா
ஆவணி மாதம் 1ஆம் திகதி 2017 ஆம் வருடம் 10.00 மணியளவில் புங்குடுதீவு ஸ்ரீ சுப்ரமணிய மகளிர் வித்தியாலயத்தில் கணனி ஆய்வுகூடம் திறந்து வைக்கப்படவுள்ளது. இதில் வலையக் கல்வி பணிப்பாளர் திரு.சுப்ரமணியம் சுந்தரசிவம் அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.இதனைத் தொடர்ந்த சிறுவர் பூங்காவும், அதிபர் அலுவலகமும் திறக்கப்படவுள்ளது.
$0