செல்வி. கேசனா திருலங்கன்

யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த திருலங்கன் கேசனா (வயது 9) என்ற மாணவி தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது கடற்படையின் கவச வாகனம் மோதி உயிரிழந்திருந்தார்.

கடற்படை முகாமிற்கு உணவு பொருட்களை விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் கவச வாகனமே, மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அவரது மாமனார் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.