Pungudutivu Ariyanayanpulam Arasinar Tamil MIxed Vidyalayam

அரியநாயகம்புலம் அரசினர் தமிழ் கலவன் வித்யாலயம்

948 இல் வித்தியதரிசி சி. முத்தையா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

புங்குடுதீவு அரியநாயகம் புலம் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயம் கழுதைப்பிட்டி துறைமுகத்திற்கு அருகாமையிலுள்ள பிரதான வீதியில் அமைந்துள்ளது. 1948 இல் வித்தியதரிசி சி. முத்தையா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இப்பாடசாலையில் ஆரம்பகால அதிபராக அளவெட்டியைச் சேர்ந்த திரு.எம்.நாகராச அவர்கள் கடமையாற்றியுள்ளார். பாடசாலைக்கான காணியை திரு. கந்தையா அவர்கள் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இப்பாடசாலையில் 1962 இல் இருந்து 8 ஆம் வகுப்பு வரை வகுப்புக்கள் நடைப்பெற்றுள்ளன. 1975 இல் இப்பாடசாலை அரசினால் கனிஷ்ட வித்தியாலயம் ஆக்கப்பட்டதைத் தொடர்ந்து 5 ஆம் தரம் வரை வகுப்புக்கள் நடைபெற்று உள்ளன. பின்னர் இராணுவ நடவடிக்கை காலப்பகுதியில் இடம்பெயர்ந்த இப்பாடசாலை அதிபரின்றி சிறிது காலம் ஏனைய புங்குடுதீவு பாடசாலைகளுடன் சேர்ந்து யாழ்நகரில் இயங்கியுள்ளது. பின்னர் யாழ் இந்து மகளிர் கல்லூரி விடுதிக் கட்டிடத்தில் 1995 வரை இயங்கிய இப்பாடசாலை தென்மராட்சசி நோக்கிய இடப்பெயர்வுடன் செயலிழந்தது. 1991 ஆம் ஆண்டு இடப்பெயர்வுடன் மூடப்பட்ட இப்பாடசாலை இன்னும் திறக்கப்படவில்லை.

2017 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Thanks for sharing!

Share on twitter
Share on facebook
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Untitled-10

Pungudutivu Ariyanayanpulam Arasinar Tamil MIxed Vidyalayam

Have a project for us?
Let's discuss it!