Pungudutivu Iruppitti American Mission Tamil Mixed Vidyalayam

இருப்பிட்டி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் வித்தியாலயம்

1950 ஆம் ஆண்டு புங்குடுதீவு இருப்பிட்டி எனும் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டதே இருப்பிட்டி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் வித்தியாலயம்.

ஆரம்பகால அதிபர்களைத் தொடர்ந்து திரு.ஜே. ஜே. சற்குணராஜா அதிபராகப் கடமையாற்றிய காலப்பகுதியில் பல துறைகளிலும் இப்பாடசாலை சிறந்து விளங்கியது. இவரைத் தொடர்ந்து திரு.மு.நடேசு, திரு.சு. வீரசிங்கம் ஆகியோர் அதிபராகக் கடமையாற்றியுள்ளனர்.திரு. சு.வீரசிங்கம் கடமையாற்றிய காலப்பகுதியில் இப்பாடசாலையின் வளர்ச்சி அதியுன்னத நிலையில் இருந்ததுள்ளது. இக்காலப்பகுதியில் 143 மாணவர்கள் கல்வி கற்றுள்ளனர்.

1991 இல் ஏற்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இப்பாடசாலை யாழ் நகருக்கு இடம்பெயர்ந்தது. யாழ் நகரில் ஏனைய புங்குடுதீவு பாடசாலைகளுடன் இணைந்து யாழ் பெரியபுலம் பாடசாலையில் இயங்கியுள்ளது. எனினும் இடப்பற்றாக்குறை காரணமாக புங்குடுதீவு பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகள் யாவும் இணைந்து சிறிதுகாலம் கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் இயங்கியுள்ளன.

1992 இல் தனித்துவத்தைப் பேணும் வகையில் யாழ் – இந்து மகளிர் கல்லூரி விடுதியில் காலை நேர பாடசாலையாக இயங்கியுள்ளது. இக்காலப்பகுதியில் இப்பாடசாலையின் அதிபராக  திரு.சு.இ. வீரசிங்கம் கடமையாற்றியுள்ளார். 58 மாணவர்கள் கல்வி கற்றுள்ளனர்.மீண்டும் 30-10-1995 இல் இடம்பெயர்ந்த இராணுவ நடவடிக்கை காரணமாக இப்பாடசாலை தென்மராட்சசிக்கு இடம்பெயர்ந்ததுடன் இப்பாடசாலையின் செயற்படுகள் செயலிழந்தன.1995 இல் செயலிழந்த இப்பாடசாலை மீண்டும் திறக்கப்படவில்லை.

2017 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Thanks for sharing!

Share on twitter
Share on facebook
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Untitled-4

Pungudutivu Iruppitti American Mission Tamil Mixed Vidyalayam

Have a project for us?
Let's discuss it!