Kurikkattuvan Arasinar Tamil Mixed Vidyalayam

புங்குடுதீவு குறிகாட்டுவான் அரசினசிர் தமிழ்க் கலவன் வித்தியாலயம்

1957 ஆம் ஆண்டு அமரர் திரு.வீ.ஏ.கந்தையா அவர்களால் இவ் வித்தியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

1910 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஸ்ரீ பராசக்த்தி கலைக்கூடம் குறிக்காட்டுவான் கிராமத்திற்கு வெளியே இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் இக்கிராம மக்கள் பராசக்த்தி வித்தியாலயத்திற்குப் பதிலாக புதியதோர் கல்விக்கூடம் அமைக்கப்பட வேண்டுமென மக்கள் ஒருமித்து செயற்பட்டனர்.இதற்காக 10 பரப்புக்கு காணியை மக்கள் நன்கொடையாக வழங்கினார்.இவர்களது கடும் உழைப்பினால் உருவாக்கப்பட்டதே குறிக்காட்டுவான் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயமாகும்.

1958 ஆம் ஆண்டு இவ் வித்தியாலயத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.இதன் பின்னர் திரு. சோ. சேனாதிராசா அதிபராக இருந்த காலப்பகுதியில் புதியதோர் கட்டிடம் ஒன்று கல்விப் பகுதியினரால் இங்கு அமைக்கப்பட்டது. 1975 இல் 53 மாணவர்கள் இவ் வித்தியாலயத்தில் கல்வி பயின்றுள்ளனர்.

1991 இல் இராணுவ நடவடிக்கை காரணமாக யாழ் நகருக்கு இடம் பெயர்ந்த இப்பாடசாலை ஏனைய புங்குடுதீவு பாடசாலைகளுடன் இணைந்து யாழ்/பெரியபுலம் மகா வித்தியாலயத்திலும், பின்னர் சிறிது காலம் யாழ்/கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும் மாலை நேர பாடசாலையாக இயங்கி உள்ளது. பின்னர் ஆனைப்பந்தி உயர் கலைக்கல்லூரியில் காலைநேர பாடசாலையாக இயங்கியுள்ளது. இக்காலப்பகுதியில் 11 மாணவர்கள் கல்வி கற்றுள்ளனர். 1995 இல் ஏற்பட்ட தென்மராட்சி நோக்கிய இடப்பெயர்வின் பின்னர் செயலிழந்த இப்பாடசாலை இன்னும் மீண்டும் திறக்கப்படவில்லை.

2017 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Thanks for sharing!

Share on twitter
Share on facebook
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Untitled-7

Kurikkattuvan Arasinar Tamil Mixed Vidyalayam

Have a project for us?
Let's discuss it!