Pungudutivu Sri Ganesha Maha Vidyalayam

சிறி சண்முகநாதன் தமிழ் மகா வித்யாலயம்

1910 ஆம் ஆண்டு வ.பசுபதிப்பிள்ளை என்பவரால் இப்பபாடசாலை உருவாக்கப்பட்டது.1914 ஆம் ஆண்டு அரசினர் உதவி நன்கொடை பெரும் பாடசாலையாக இவ்வித்தியாலயம் அங்கீகாரம் பெற்றது.

1923 ஆம் ஆண்டு உயர்தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலையாக மாற்றம் பெற்றது.1936 ஆம் ஆண்டு இவ் வித்தியாலயம் சிரேஷ்ட உயர்நிலைப் பாடசாலையாக தரம் உயர்தம் பெற்றது. 1967 இல் கல்விப்பகுதியின் பாடசாலைகள் புனரமைப்பின் காரணமாக இப்பாடசாலை 1972 ஆம் ஆண்டு முதல் கனிஷ்ட வித்தியாலயமாக்கப்பட்டது. பல்லாண்டுகளாக சிரேஷ்ட வித்தியாலயமாக விளங்கிய இப்பாடசாலை கல்வித் துறையிலும், மாணவர் தொகையிலும் பெருவளர்ச்சி கண்டமையினால் இவ் வித்தியாலயம் கல்வி அமைச்சினால் மகா வித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது.

துரித வளர்ச்சி கண்ட இப்பாடசாலை 1991இல் நிகழ்ந்த இடப்பெயர்வினால் 1997 வரை சொந்த இடத்தில இயங்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது. யாழ் நகருக்கு இடம் பெயர்ந்து புங்குடுதீவு பாடசாலைகளுடன் இணைந்து கொக்குவில் பெரிய புலம் வித்தியாலயத்தில் இயங்க ஆரம்பித்தது. இடப்பற்றாக்குறை காரணமாக பின்னர் கந்தர்மடம் தனியார் கல்வி நிறுவனமான யூனிவேர்சல் நிறுவனத்தில் சில பாடசாலைகளுடன் இணைந்து செயற்பட்டது. அதன் பின்னர் முஸ்லீம் கதிஜா மகா வித்தியாலயத்தில் தனித்து இயங்கத் தொடங்கியது.

யாழிலும் அதிக காலம் விட்டு வைக்கவில்லை 1995 இல் யாழ் நகர இடம்பெயர்வோடு வலிகாமத்தில் சிலரும், வன்னியில் சிலருமாக சிதறடிக்கப்பட்டனர்.1996 இல் இருந்து இயங்காதிருந்த இப்பாடசாலை பழைய மாணவர்களின் முயற்சியினால் 1997 இல் மீண்டும் இயங்க ஆரம்பித்தது. அமரர் வ.பசுபதிப்பிள்ளையின் பின்னர் திரு.க.மு.சின்னத்துரை அவர்கள் 1957 ஆம் ஆண்டுவரை இவ்வித்தியாலயத்திற்கு முகாமையாளராகப் பணியாற்றினார். 1962 இல் அரசாங்கம் இவ்வித்தியாலயத்தைக் கையேற்றது.

1971 இல் இப்பாடசாலையின் பழைய மாணவரான திரு.நா.கார்த்திகேசு அவர்கள் அதிபராகப் பணியேற்று 1981 வரை சேவையாற்றினார். இக்காலத்திலேயே இப்பாடசாலை மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது.

1982 இல் திரு. த. துரைசிங்கம் இவ்வித்தியாலயத்தின் அதிபராக நியமனம் பெற்றதைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் படிப்படியாக வளர்ச்சிக் கண்டது. இவரது சேவையைத் தொடர்ந்து திரு.கே. டி. தர்மலிங்கம் அதிபராகப் பதவியேற்றார். இவருடைய காலத்தில் புங்குடுதீவு இடப்பெயர்வினால் யாழ் நகருக்கு இடம் பெயர்ந்தது.

அதன் பிறகு திரு.செ. ஈஸ்வரமுத்து அத்திபராகப் பதவியேற்றார். இடம்பெயர்ந்த நிலையில் கஷ்டப்பட்ட போது கைவிடப்பட்ட நிலையில் கிடந்த முஸ்லீம் கதிஜா மகா வித்தியாலயத்தில் மீண்டும் பாடசாலையை செயற்பட செய்தார். இந்நிலையில் 1996 இல் யாழிலிருந்தும்  இடம் பெயர்ந்தமையால் இவ் வித்தியாலயம் இயங்க முடியாமல் போனது.1997 இல் யாழ் நகர் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர் இவ் வித்தியாலயம் மீண்டும் இயங்க ஆரம்பித்தது.

2017 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

தேவைகள்

நிதி உதவி வழங்கியவர்கள்

இல பெயர் இடம் அமைப்பு பிறந்த இடம் தொகை
00 00 00 00 00 00
POBC

Pungudutivu Old Boys Club புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்

Thanks for sharing!

Share on twitter
Share on facebook
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Untitled-1

Pungudutivu Sri Ganesha Maha Vidyalayam

Have a project for us?
Let's discuss it!