Sri Nainativu Maha Vidyalayam

ஸ்ரீ நயினாதீவு மகா வித்தியாலயம்

1946 ஆம் ஆண்டு திரு.டபிள்யு கன்னங்கர அவர்களின் பெருமுயற்சியினால் இப்பாடசாலை நிறுவப்பட்டது.

ஆரம்பத்தில் கட்டடமோ நிலமோ இல்லாத போது திரு மாரிமுத்து அவர்களின் யாத்திரிகளுக்கென அமைக்கப்பட்ட மடத்தில் இப்பாடசாலை இயங்கியது. ஒரு வருடகாலம் மடத்தில் இயங்கி வந்த இப்பாடசாலை 1947 ஆம் ஆண்டு பெற்றோர்களின் உழைப்பினால் புதுப்பொழிவு பெற்றது.

ஆரம்பத்தில் கனிஷ்ட பாடசாலையாக இருந்த இப்பாடசாலை பின்னர் மகாவித்யாலயமாக தரம் உயர்த்தப்பட்டது.   1946 ஆம் ஆண்டு திரு எஸ். கந்தப்பு அவர்கள் பாடசாலை அதிபராக பணியாற்றி வந்தார். இவரைத் தொடர்ந்து பல அதிபர்கள் இப்பாடசாலையில் பணியாற்றி வந்துள்ளனர்.

1976 இல் திரு தி.வே. விசுவலிங்கம் அதிபராக  இருந்தபோது 16 ஆசிரியர்களும் 314 மாணவர்களும் கல்வி பயின்றுள்ளனர். 1979 இல் நூல் நிலையம் விஸ்தரிக்கப்பட்டது. மின்சார விநியோகமும் கிடைக்கபெற்றது. இவரைத் தொடர்ந்து திரு.சோ. தில்லைநாதன் அவர்கள் அதிபராக கடமையாற்றினார். இக்கலப்பகுதிகளில் இப்பாடசாலை பல துறைகளிலும் சிறப்பாக கடமையாற்றி வந்தது.2010 ஆம் ஆண்டு திரு. சோ. குகனேசன் அவர்கள் கடமைப் பொறுப்பேற்று சிறந்த கவின்நிலையுடன் கூடிய பாடசாலையாக மாற்றியமைத்தார். அன்றிலிருந்து இன்ருவரை இப்பாடசாலை சிறப்புடன் பணியாற்றி வருகிறது.

2017 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Thanks for sharing!

Share on twitter
Share on facebook
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
na

Sri Nainativu Maha Vidyalayam

Have a project for us?
Let's discuss it!